Press "Enter" to skip to content

அமெரிக்காவில் 4 பேரை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக் கொலை

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பிரிட்டனை சேர்ந்த மாலிக் பைசல் அக்ரம் என்பது தெரிய வந்துள்ளது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

டெக்சாஸ்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கோலிவில்லே பகுதியில் யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேல் சபை உள்ளது. நேற்று இந்த வழிபாட்டு ஆலயத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 4 பேர்களை பிணைய கைதிகளை பிடித்துக்  கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த அமெரிக்க காவல் துறையினர் அங்கு விரைந்தனர். அப்பகுதியில் உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பணயக் கைதிகளை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.  10 மணி நேரத்துக்கு பிறகு பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.  

இதையடுத்து அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அதன் பின் மாலிக் பைசல் அக்ரமை எப்.பி.ஐ. காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். அனைத்து பிணைய கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது  மாகாண ஆளுநர் அபாட் இதை உறுதிப்படுத்தினார்.   பைசலுக்கு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 

அந்த நபர் விடுவிக்கக்கோரிய ஆபியா சித்திக் பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியாவார்.  அமெரிக்காவால் வேடி கொய்தா என்று அழைக்கப்படும் ஆபியா சித்திக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். 

அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ளார்.  சுட்டுக் கொல்லப்பட்ட மாலிக் பைசல் அக்ரம், ஆபியாவின் சகோதரர் என கூறப்படுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »