Press "Enter" to skip to content

தைப்பூச திருவிழா – வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி பார்வை காட்டப்பட்டது

பொது மக்கள் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடலூர்:

   

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

உள்ளூர் நபர்கள் அன்னதானம் பொட்டலம் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஜோதி பார்வை இன்று காலை 6 மணிக்கு காட்டப்பட்டது.  பக்தர்கள் இன்றி 7 திரை நீக்கி ஜோதி பார்வை காண்பிக்கப்பட்டது. காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் ஜோதி பார்வை நடைபெறுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »