Press "Enter" to skip to content

தேநீருடன் காலை உணவு வழங்காததால் ஆத்திரம்: மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனாரால் பரபரப்பு

சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் துப்பாக்கி குண்டு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76). இவருக்கு அவரது 42 வயது மருமகள் நேற்று காலை தேநீர் வழங்கியதாக தெரிகிறது. அப்போது, அதனுடன் காலை உணவும் வழங்காததால் காஷிநாத் ஆத்திரமடைந்துள்ளார். இதில் காஷிநாத்துக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபத்தில் காஷிநாத் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டுள்ளார். இதில், மருமகளின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு, காஷிநாத் மீது காவல்துறையில் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், காஷிநாத்திடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு வேறேதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. ஆவடியில் நரிக்குறவ மாணவிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்- நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »