Press "Enter" to skip to content

மும்பை அருகே புதுச்சேரி விரைவு தொடர் வண்டி தடம் புரண்டு விபத்து

தடம் புரண்ட தொடர் வண்டி பெட்டிகளில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுளளதாக மத்தியதொடர்வண்டித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்டுங்கா :

மும்பையின் தாதர் தொடர் வண்டி நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட புதுச்சேரி விரைவு தொடர் வண்டி, மாட்டுங்கா தொடர் வண்டி நிலையம் அருகே வந்த போது விபத்தை சந்தித்தது. 

அந்த ரெயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டது. தகவல் அறிந்து உடடியாக விரைந்ததொடர்வண்டித் துறை காவல் துறையினர் மற்றும் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும்,  அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாகதொடர்வண்டித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தொடர் வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய தொடர்வண்டித் துறை கூடுதல் பொது மேலாளர் பி கே தாதாபாய் தெரிவித்தார். 

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தால் அந்த தடத்தில் தொடர் வண்டி போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »