Press "Enter" to skip to content

மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டோம்: உக்ரைன் ராணுவ வீரர்கள் சரண் அடைய ரஷியா கெடு

சரண் அடையும் அனைவரின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம் என்று உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா உறுதி அளித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2 மாதத்தை நெருங்கி உள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள், துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியது. அந்நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள் முன்னேறி சென்றன. அங்கு சில நாட்களாக கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையே மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்களுக்கு சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷியா கெடு விதித்துள்ளது. அந்நகரில் எஞ்சியுள்ள உக்ரைன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள், அசோவ் ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் உள்ளனர்.

இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும்.

சரண் அடையும் அனைவரின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலோக ஆலையில் உருவாகியுள்ள பேரழிவு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொண்டு முற்றிலும் மனிதாபிமான கொள்கைகளால் வழி நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு உக்ரைன் வீரர்கள், எந்தவொரு விரோதத்தையும் நிறுத்தி விட்டு ஆயுதங்களை கீழே போட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷியா நேரப்படி இன்று மதியம் 1 மணி வரை சரண் அடைய கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷிய போர்க்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் மீண்டும் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை கடுமையாக்கியுள்ளன. அங்கு குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. அதே போல் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்கிறது.

இதையும் படியுங்கள்.. ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »