Press "Enter" to skip to content

ஆஷிஷ் மிஷ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பாஜகவினரின் தேர் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா். 

இந்தச் சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.2 ஆம் தேதி பிணை வழங்கியது. இதை ஏதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »