Press "Enter" to skip to content

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

குஜராத்தின் தியோடரில் உள்ள பனாஸ் பால் பண்ணையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

இந்நிலையில், ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

அப்போது மொரீஷியஸ்  பிரதமர் பிரவிந்த், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »