Press "Enter" to skip to content

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின்

ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின்கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இன்று, மணலி புதுநகர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை உள்பட கொசஸ்தலை ஆற்று பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, மணலி புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின்கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர்ந்து, மணலி வடிவுடையம்மன் கோவிலிலும் அதன் சுற்றியுள்ள தெருக்களிலும் மற்றும் புதுநகர் அருகேவுள்ள கொசஸ்தலை ஆற்றில் இணையும் மழைநீர் வடிகாலையும் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர், கொருக்குப்பேட்டை பகுதிக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் ஆய்வு பணிகளை மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். தமிழக முதல்வருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள்.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »