Press "Enter" to skip to content

மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் தேங்காய் துண்டு- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் தகவல்

அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக் கடலை, சத்தான காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சத்துணவு திட்டத்துக்கு உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக் கடலை, சத்தான காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

10 ஆயிரம் மையங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, அவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே உறுப்பினர் கேட்பது போல உயிர்ம விளை பொருட்களை வழங்கும் திட்டம் தற்போது இல்லை என தெரிவித்தார்.

இதற்கு பின்னர் பேசிய ஜவாஹிருல்லா சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன் தேங்காய் துண்டு வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

இதையும் படியுங்கள்… கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »