Press "Enter" to skip to content

காங்கிரஸை வலுப்படுத்த பிரசாந்த் கிஷோர் அளித்த திட்டங்கள் என்னென்ன?- முழு தகவல்

இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார்.

புது டெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் காங்கிரஸ் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அவர் புதிய வியூகங்களுடன் சோனியாவை அணுகி உள்ளார்.

சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு குற்றங்களை விவரித்தார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

மேலும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவரத் தயார் என்றும் கூறினார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டியவை:-

1) மக்களுக்கு புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும்.

2) அதன் மதிப்புகள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்தல்.

3) உரிமை உணர்வு மற்றும் முகஸ்துதியை அழித்தல்.

4) கூட்டணி பிரச்சனையை சரி செய்தல்.

5) வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும்.

6) அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் நிறுவன அமைப்புகளை மறுசீரமைத்தல்.

7) காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் குழு உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிலையான கால, நிலையான பதவிக்காலம்.

8) 15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துங்கள் மற்றும் இந்தியா முழுவதும் 1 கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப்பணியில் ஈடுபட செய்தல்.

9) 200+ ஒத்த எண்ணம் கொண்ட இன்ஃப்ளூயினர்சகள், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஒருங்கிணைத்தல், கருத்து வேறுபாடுகளை எழுப்புதல் மற்றும் இணைந்து செயல்படுதலை உறுதி செய்ய வேண்டும்.

இவை பிரஷாந்த் கிஷோர் அளித்த வியூக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த வியூகங்களை ஆராய 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »