Press "Enter" to skip to content

வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவச் செல்வங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் உற்சாகம் தருவதாக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

பின்னர் மாணவர்களிடையே அவர் பேசியதாவது:-

கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன். மாணவச் செல்வங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் உற்சாகம் தருவதாக உள்ளது. மாணவர்களை பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது.

எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணியாற்றுவேன் என்று சொன்னதை இப்போது செய்து வருகிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களில் ஒருவனாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம். நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று கூறும் நிலையை உருவாக்க வேண்டும். ஓயாத பணியால் நாட்டிலேயே முதன்மையான முதல்வராக இருக்க முடிகிறது.

வெறுப்புக்கும், பகைக்கும் இடமளிக்கக் கூடாது என்ற பண்பை பள்ளிக்காலத்திலேயே பெற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கொடநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்- சசிகலா

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »