Press "Enter" to skip to content

நாட்டில் கணினி மயமான பணப் பரிவர்த்தனை அதிகரிப்பு- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.

மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ கணினி மயமான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி கணினிமய பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட கணினி மயமான பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணத்தை எடுத்துச் செல்லவோ அல்லது பண இயந்திரம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை.

ஒரு நாள் முழுவதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் கணினி மயமான பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி முடியும். ரூபாய் தாள்களை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் கணினி மயமான பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- மக்களின் குறைகளை கேட்டார்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »