Press "Enter" to skip to content

ஜம்மு காஷ்மீரில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

30 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அங்கிருந்தவாறே நாடு முழுவதும் இன்று நடை பெற்ற கிராமசபை கூட்டத் தில் உரையாற்றினார்.

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றார். அங்கு, ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட பாலி பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை காஷ்மீர் சென்றார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரம் நீக்கப்பட்ட பிறகு மோடி முதல்முறையாக காஷ்மீருக்கு சென்றார். பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் அவர் வருகையையொட்டி வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

30 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அங்கிருந்தவாறே நாடு முழுவதும் இன்று நடை பெற்ற கிராமசபை கூட்டத்தில் உரையாற்றினார்.

அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ.3,100 கோடி மதிப்பில் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள 16 கிலோ மீட்டர் தொலைவு பனிஹல்- காசிகுண்ட் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் நோக்கமாக கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பாலி பஞ்சாயத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 கிலோவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தையும் மோடி தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாட்டில் கார்பன் இல்லா முதல் பஞ்சாயத்தாக பாலி உருவாகிறது.

மேலும் ரூ.7,500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டெல்லி- அமிர்தசரஸ்-சத்ரா எக்ஸ்பிரஸ் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதோடு ரூ.5,800 கோடியில் கிஸ்த்வாரில் 850 மெகா வாட் நீர்மின் திட்டம், ரூ.4,500 கோடி மதிப்பிலான குவார் நீர்மின்திட்ட பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

கிராம மக்கள் அவர்களின் சொந்த உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட உதவும் ‘ஸ்வமித்வா’ அட்டைகளை பயனாளிகளுக்கு மோடி வழங்கினார். மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்ற உள்ளாட்சி அமைப்பு களுக்கு பரிசு தொகை வினியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று மாலை பிரதமர் மோடி அங்கிருந்து மும்பை செல்கிறார். அங்கு அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »