Press "Enter" to skip to content

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட தொடர் வண்டி பெட்டிகளை மீட்டதொடர்வண்டித் துறை ஊழியர்கள்

தொடர் வண்டி விபத்திற்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெற்குதொடர்வண்டித் துறை கூறியுள்ளது.

சென்னை:

சென்னை கடற்கரை தொடர் வண்டி நிலையத்தில் நேற்று மாலை மின்சார தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார தொடர் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது. 

தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும்தொடர்வண்டித் துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினர்.தொடர்வண்டித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக பணிமனையில் இருந்து வந்த தொடர் வண்டி என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  

இதுதொடர்பாக,தொடர்வண்டித் துறை பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டது. டிரைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தார். 

இந்நிலையில், 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய மின்சார ரெயிலின் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »