Press "Enter" to skip to content

தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி

நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகளுக்கு மத்தியில் சாக்‌ஷியின் ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. ஒரே நேரத்தில் 78 ஆயிரம் தேசியக் கொடிகளை அசைத்து உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »