Press "Enter" to skip to content

தஞ்சை தேர் விபத்து- சட்டசபையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முடிவு

தேர் விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீப்பற்றி எரிந்த தேரை போராடி அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டசபையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சட்டசபையில் உள்ள அனைத்துக்கட்சிகளின் சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக திருவயைாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. டெல்லி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமைச்சர் உத்தரவு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »