Press "Enter" to skip to content

தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 15 பேருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது, ஊர்வலம் சென்ற தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் தஞ்சாவூர் மருத்துவமனையில் தீவிர சிசிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

இந்நிலையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 15 பேருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தேர் விபத்து- தஞ்சை விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »