Press "Enter" to skip to content

குஜராத்தில் உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சூரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இன்று முதல் மே 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

படிதார் சமூகத்தின் சமூக- பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகத்தை வழங்கும் வகையில் சர்தார்தம் ‘மிஷன் 2026-ன்’ கீழ் படிதார் வணிக உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடைபெற்றன.

தற்போதைய உச்சி மாநாடு இன்று சூரத்தில் ‘ஆத்மநிர்பர் சமூகம் ஆத்மநிர்பர் குஜராத் மற்றும் இந்தியா’ என்கிற முக்கிய கருப்பொருளின் கீழ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.

உச்சி மாநாடு படிதார் சமூகத்திற்குள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய தொழில்முனைவோரை வளர்த்து ஆதரிப்பது மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. கர்நாடகத்தில் கன்னடத்திற்கு தான் முன்னுரிமை: டி.கே.சிவக்குமார்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »