Press "Enter" to skip to content

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி- கல்லூரி டீன் அதிரடி மாற்றம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் அசை்சர்கள் பழனிவேல் தியாகராஜ், பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் அசை்சர்கள் பழனிவேல் தியாகராஜ், பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆங்கில உறுதிமொழி ஏற்பில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழியும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது குறித்து கல்லூரி முதல்வரிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் கேட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »