Press "Enter" to skip to content

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை:

சென்னை, கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார். பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஆராயச்சி நிறுவனம் அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்றார்.

தரமான சாலைகளை அமைப்பதே தமிழக அரசின் இலக்கு, நாட்டிலேயே தரமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் திகழ்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »