Press "Enter" to skip to content

உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது- ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் – ரஷியா மோதலால் எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பெர்லின்:

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்  மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்கால்சுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி பேசியதாவது:-

இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் பல தொடர்புகள், ஒற்றுமைகள் உள்ளன. உலகில் பல பொருளாதார விளைவுகளை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. உலகில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெருந்தொற்று ஏற்பட்டதை நாம் போர் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தப் போரில் வெற்றி முக்கியமல்ல. அனைவரும் இதில் ஈடுபடவேண்டும். அமைதியாக நாம் இதை எதிர்கொள்ள வேண்டும்.

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என கூறியிருந்தோம். இந்தப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். 

உக்ரைன், ரஷியா மோதலால் எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாம் இதை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இதனுடைய பாதிப்பும் தீவிரமாக இருக்கும். 

இந்தியா இந்த பொருளாதார நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மற்ற நட்பு நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை எப்படி எட்ட வேண்டும் என்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறது. அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியா – ஜெர்மனி நட்புறவில் புதிய தொடக்கம் உருவாகியிருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் பேசுகையில், உக்ரைன் மீதான தாக்குதலின் மூலம், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா மீறி உள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுமக்கள் கொல்லப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன், உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »