Press "Enter" to skip to content

சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை- சோனியா காந்திக்கு, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் வலியுறுத்தல்

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அமிர்தசரஸ்:

அகில இந்திய காங்கிரஸ் குழுயின் பஞ்சாப் மற்றும் சண்டிகருக்கு பொறுப்பாளாக இருக்கும் ஹரிஷ் சவுத்ரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

அதில் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிரோமணி அகாலி தளத்துடன் கைகோர்த்துள்ள சித்து, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டநிலையில், சித்துவின் இதுபோன்ற செயல்பாடு பொருத்தமற்றதாக இருந்தது என்றும், அதை தவிர்க்குமாறு நான் அவருக்கு பலமுறை அறிவுறுத்திய போதிலும், அவர் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் அரசிற்கு எதிராக பேசி வந்தார் என்றும் தமது கடித்தில் சவுத்ரி கூறியுள்ளார். 

சித்துவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து புதிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜா வார்ரிங்கின் விரிவான விளக்கத்தையும் தாம் அனுப்புவதாகவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்

பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சித்து, தான் கட்சியை விட பெரியவன் என்று காட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும், கட்சி ஒழுங்கு விதிகளை மீறுவதன் மூலம்  மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது என்றும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹரிஷ் சவுத்ரி தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »