Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை 21 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் நிகோலஸ் பூரன், மார்கிராம் ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஐதராபாத் சார்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர்.

இதையடுத்து 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ரன், கேப்டன் வில்லியம்சன் 4 ரன், ராகுல் திரிபாதி 22 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய மார்கிராம், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்கிராம் 25 பந்தில் 42 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஷஷாங்க் 10 ஓட்டத்தில் வெளியேறினார்.

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »