Press "Enter" to skip to content

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு

ஆகாஷ் பிரைம் ரக ஏவுகணை எதிரிகளின் விமானம் மற்றும் ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவை.

புதுடெல்லி:

அண்டை நாடுகளிடம் இருந்து இந்திய பகுதிகளுக்குள் வரும் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க நவீன ரக ஏவுகணை தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்திய ராணுவத்திற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.)  தற்போது ஆகாஷ் பிரைம் ரக ஏவுகணைகளை தயாரித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  ஆகாஷ் பிரைம் ரக ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது  இந்திய ராணுவத்தில் இரண்டு ஏவுகணைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய ரக ஏவுகணைகள் எதிரிகளின் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவை.

தற்போதுள்ள ஆகாஷ் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, புதிய ஆகாஷ் பிரைம் ஏவுகணைகள் மிக துல்லியமுடன் செயல்படக் கூடியவை. மேலும்

நவீன வானொலி அதிர்வெண் சாதனங்களையும் கொண்டுள்ளன.

அதிக உயரத்திலும், குறைவான வெப்பநிலை சூழ்நிலைகளிலும் எதிரிகளின் இலக்கை தாக்கும் திறம் படைத்தவை.  இந்த நவீன ரக ஏவுகணைகளை 4,500 மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்….அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்- பாஜக தலைவர் கைது

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »