Press "Enter" to skip to content

ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடம்- ஆய்வில் தகவல்

கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள் தந்தை வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய் வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

பெங்களூரு:

ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் தென் மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த ரத்த உறவு திருமணங்களில் கர்நாடகம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வது தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள் தந்தை வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய் வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தடுக்க ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதாவது அங்கு 28 சதவீதம் ரத்த உறவு திருமணங்கள் நடக்கிறது. ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »