Press "Enter" to skip to content

வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா தொற்று – நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு

மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

பியோங்கியாங்:

கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று இன்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திவீரமாக உலக நாடுகள் தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது. 

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது:-

தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது.

மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இவ்வாறு வடகொரிய அதிபர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »