Press "Enter" to skip to content

இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன், இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

கொழும்பு:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 

இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்பதாக நேற்று கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26-வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளதாக கூறப்படுகின்றது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »