Press "Enter" to skip to content

எஸ்.டி.பி.ஐ.- பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத அமைப்புகள்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

கேரள மாநிலம் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த எஸ்.சஞ்சித் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி அர்ஷிகா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கே ஹரிபால், கடந்த 5ந்தேதி வழங்கிய தீர்ப்பில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவை தீவிரவாத அமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்திருந்தார். 

கடுமையான வன்முறை செயல்களில் ஈடுபட்ட போதிலும், அவை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இல்லை என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியிருந்தார். 

இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறை அக்கறை எடுத்துள்ளனர்.  மாநில அளவிலான அல்லது தேசிய அளவிலான தலைவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என்று விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். 

சில குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் என்ற காரணத்திற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. மாநில புலனாய்வு அமைப்புக்கு குற்றவாளிகளைக் காப்பதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே

பாகுபாடான அணுகுமுறையை என்று ஊகிக்க முடியாது என தமது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருந்தார். 

இந்த தீர்ப்பு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவிரவாத அமைப்பு என்ற நீதிபதியின் கருத்துக்களை நீக்கக்கோரி, மேல்முறையீடு செய்யப் போவதாக எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் மூவாட்டுப்புழா அஷ்ரப் மௌலவி தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »