Press "Enter" to skip to content

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தற்போதைய நிலையில் திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் கிடைக்கும் என்ற நிலையில் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

காலியாகப் போகும் இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் 4 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும்.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்,  கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »