Press "Enter" to skip to content

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதை போல தமிழ் மிகவும் பழமையான மொழி.

முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி தமிழர்கள் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்துள்ளவர்கள். நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.

சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்.

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன்.

இதனால் நாடு முழுவதும் தமிழை பரப்ப வேண்டும். பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »