Press "Enter" to skip to content

கனகசபை பார்வை- காவல் துறை பாதுகாப்புடன் பக்தர்களுக்கு அனுமதி

எஸ்.பி.சக்திகணேசன் தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சபாநாயகர் (நடராஜர்) கோவிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை பார்வை செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துகளை அரசு பரிசீலனை செய்து, கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பார்வை செய்ய காவல் துறை பாதுகாப்புடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின் கனகசபை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

எஸ்.பி.சக்திகணேசன் தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »