Press "Enter" to skip to content

கல்லெண்ணெய், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கல்லெண்ணெய் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்லெண்ணெய் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், கல்லெண்ணெய் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »