Press "Enter" to skip to content

கே.எல்.ராகுல் போராட்டம் வீண் – லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது மட்டையிலக்குடுக்கு 95 ஓட்டங்கள் சேர்த்தது.

கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 207 ஓட்டங்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ஓட்டத்தை எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ஓட்டத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ஓட்டத்தில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், லக்னோ அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 193 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

பெங்களூரு அணி சார்பில் ஹேசில்வுட் 3 மட்டையிலக்கு, சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு கைப்பற்றினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »