Press "Enter" to skip to content

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு

அபாயம் உள்ள பகுதிகளில் 32,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பெர்னாம்புகோ:

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த அடைமழை (கனமழை)யால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  760 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மற்றொரு மாநிலமான அலகோவாஸில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் இறந்தனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 32,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 

வீடுகளை இழந்தவர்களுக்காக ரெசிஃப் நகரில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  அலகோவாஸில், கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை (கனமழை) பாதிப்புகள் காரணமாக 33 நகராட்சி பகுதிகளில் அவசரநிலையை அறிவிக்கப் பட்டுள்ளது.  

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »