Press "Enter" to skip to content

கடந்த ஓராண்டில் 102 டன் போதைப்பொருள் பறிமுதல்- மா.சுப்பிரமணியன்

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 21 கடைகளுக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை 799.8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம்.

குட்கா இருக்கக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே பேரவையில் சுட்டிக் காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 21 கடைகளுக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »