Press "Enter" to skip to content

இந்தியாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

குற்றம் நடைபெறுவதற்கு முன் அதை தடுப்பதுதான் நல்லது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

புது டெல்லி:

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையி தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம். அதேபோல வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது.

இவ்வாறு தடை குறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »