Press "Enter" to skip to content

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ முதல் பார்வை வெளியீடு

ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ஓரிரண்டு மாதங்களில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »