Press "Enter" to skip to content

தனுஷின் 50-வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்!

சென்னை: நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெகு விரைவில் படக்குழு குறித்த அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாது பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அதற்கு முன்னர் ஆடுகளம் மற்றும் மாப்பிள்ளை போன்ற தனுஷ் படங்களை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது உட்பட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »