Press "Enter" to skip to content

கோயிலுக்குள் செல்ல அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு – நிர்வாகம் விளக்கம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவைராணி குளம்மகாதேவர் கோயில் உள்ளது. சிவ – பார்வதி கோயிலான இங்கு, நடிகை அமலா பால், சாமிபார்வை செய்வதற்காக தனது குடும்பத்துடன் திங்கட்கிழமை சென்றார். கோயில் நிர்வாகிகள், இங்கு இந்துக்கள் மட்டுமே செல்லவேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று கூறினர். பின்னர் கோயிலுக்கு வெளியில் நின்று பார்வை செய்தார் அமலாபால்.

இதுபற்றி கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் , “கோயிலுக்கு சாமிபார்வை செய்ய ஆர்வத்துடன் வந்தேன். அனுமதி மறுக்கப்பட்டது. 2023-ம் ஆண்டிலும் மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமுமாக இருக்கிறது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் காலம் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கோயில் அறக்கட்டளைநிர்வாகி பிரசூன் குமார், “பிறமதத்தை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.அதுயாருக்கும் தெரியாது. ஆனால், பிரபலங்களைஅனுமதித்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. பின் நடைமுறையைமீறியதாக சர்ச்சையாகி விடும். அதனால்தான் அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »