Press "Enter" to skip to content

திருப்பதியில் தொடங்கிய ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

நடிகர் கமலின் ‘இந்தியன்2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் தொடங்கி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘இந்தியன்2’ திரைப்படத்தின் அடுத்த ஷெட்யூல் திருப்பதியில் இன்று தொடங்கி இருக்கிறது. சென்னையில் முடித்தப் பிறகு இன்று தொடங்கியுள்ள இந்த திருப்பதி ஷெட்யூலில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டுள்ளார்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், திருப்பதி மலைப்பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன், சித்தார்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »