Press "Enter" to skip to content

இந்தி நடிகரின் ‘வொர்க் ஷாப்’ – விஜய் சேதுபதி விருப்பம்

விஜய் சேதுபதி தற்போது ‘காந்தி டாக்ஸ்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். கிஷோர் பி.பெலேகர் இயக்கும் இதை, ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மவுனப் படமாக உருவாகும் இதில் அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் உட்பட பலர் நடிக்கின்றனர். ப்ளாக் நகைச்சுவை ஜானரில் உருவாகும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மூத்த இந்தி நடிகர் கோவிந்த் நாம்தேவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய் சேதுபதி பற்றி அவர் கூறியதாவது:

அவரைப் போன்ற எளிமையான நடிகரைப் பார்த்ததில்லை. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புப் பட்டறைகளை நடத்துகிறேன் என்றேன். உடனடியாக, ‘நானும் உங்கள் பட்டறையில் சேர விரும்புகிறேன்’ என்றார். நான், ‘உங்களுக்கான தேவை அதில் என்ன இருக்கிறது? நீங்கள் ஏற்கனவே நன்கறிந்த ஜாம்பவான் நடிகர்’ என்றேன். அவர், ‘எனக்கு இதுபோன்ற பயிற்சிகள் பிடிக்கும். புதிதாக எதையாவது தெரிந்துகொள்ள முடியும்’ என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்தேன். அவரிடம் தேடல் இருக்கிறது. ஹாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள், நடிப்புப் பட்டறைகளை நடத்துகிறார்கள். அதன் மூலம் தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்தபோது மகிழ்ச்சியாக இருந்தேன். அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவ்வாறு கோவிந்த் நாம்தேவ் தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »