Press "Enter" to skip to content

டாடா வெளியீடு தேதி மாற்றம்

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘டாடா’. பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஒலிம்பியா நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வரும் 26-ம் தேதி வெளியீடு செய்ய திட்டமிட்டிருந்தனர். அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், வெளியீடு தேதியை திடீரென படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10-ம் தேதி இந்தப் படம் வெளியீடு ஆகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »