Press "Enter" to skip to content

தந்தை – மகள் பாசம் பேசும் ‘பொம்மை நாயகி’ பட விளம்பரம் எப்படி?

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். சிறுமி ஸ்ரீமதியுடன் யோகிபாபு கடலருகே நின்றுகொண்டு கைகாட்டும் முதல் பார்வை ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் படத்தின் பட விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக பேச முயற்சிப்பதை பட விளம்பரம் உணர்த்துகிறது. தொடக்கத்தில் வரும் கடலலைக் காட்சிகள், தந்தை மகளுக்கான விஷுவல்ஸ் ஈர்க்கிறது. நகைச்சுவையில்லாமல் கதைக்கான முக்கியத்துவத்துடன் நகரும் பட விளம்பரம் படத்தின் தரத்தை உணர்த்துகிறது.

காணாமல் போகும் மகளைத் தேடும் நடுத்தர வர்க்கத் தந்தையின் போராட்டமாக விரியும் ட்ரெய்லரும், ‘தப்பு செஞ்சவனெல்லாம் சந்தோஷமா இருக்கலாம்; பாதிக்கப்பட்டவங்க?’ ‘போற உயிர் அவங்க கிட்ட போராடி போகட்டும்’ வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அழுத்தமான கதைக்களத்துடன் நகரும் பட விளம்பரம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற கணக்காக ஈர்க்கிறது. படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ட்ரெய்லர் காணொளி:

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »