Press "Enter" to skip to content

‘மூளை மாற்று அறுவை சிகிச்சை’ அபாயம் பேசும் ‘பிச்சைக்காரன் 2’ ஸ்னீக்பீக் பட விளம்பரம் எப்படி?

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக்பீக் பட விளம்பரம் காணொளி வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக்பீக் பட விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது. படம் வரும் மேமாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ‘மணி இஸ் இன்சூரியஸ் டூ தி வேர்ல்டு’ என்ற வாசகத்துடன் பின்னணியில் தொழிலதிபர் ஒருவரின் தற்கொலை செய்தி ஒலிக்கிறது. பின்னர் அந்த தொழிலதிபரின் தற்கொலையும் காட்டப்படுகிறது. தொடர்ந்து ‘மூளை மாற்று அறுவை’ சிகிச்சை குறித்த நேர்காணலில் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் தீயவர்கள் பயன்பெற்றால் என்ன நடக்கும் என்பதுடன் பட விளம்பரம் நிறைவடைகிறது.

‘மூளைமாற்று அறுவை’ சிகிச்சை குறித்தும் அதன் அபாயங்கள் குறித்த கதைக்களத்தை படம் அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை 3.45 நிமிடங்கள் ஓடும் இந்த ஸ்னீக்பீக் பட விளம்பரம் உறுதி செய்கிறது. மற்றபடி பெரிய அளவில் சுவராஸ்யமான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. ட்ரெய்லருக்கு பதிலாக தனது படத்தின் முதல் 4 நிமிட காட்சிகளை ஸ்னீக்பீக்காக வெளியிட்டு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. – ட்ரெய்லர் காணொளி:

[embedded content]

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »