Press "Enter" to skip to content

“வட மாநில பாட்டாளிகள் மீது வன்மத்தை விதைப்பது சரியல்ல” – இயக்குநர் நவீன்

“வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல” என ‘மூடர் கூடம்’ பட இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், “வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதே கருத்தை வலியறுத்தியுள்ள ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குநரும் நடிகருமான நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்” என பதிவிட்டுள்ளார்.

வாசிக்க: வட இந்தியத் தொழிலாளர்களின் வருகை: வரமா, சாபமா?

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »