Press "Enter" to skip to content

‘லியோ’வில் கவுதம் மேனன் – காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

‘வாரிசு’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். கடந்த வாரம் மிஷ்கின் தொடர்பான காட்சிகள் நிறைவு பெற்றது. இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தொடர்பான காட்சிகள் காஷ்மீரில் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து அவர் சென்னை திரும்புகிறார். அடுத்து விஜய்யுடன், சஞ்சய் தத், அர்ஜுன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »