Press "Enter" to skip to content

ரூ.3 கோடி வரவு செலவுத் திட்டம்… இதுவரை ரூ.62 கோடி வசூல் – அசத்தும் ‘ரோமாஞ்சம்’!

வெறும் ரூ.3 கோடி வரவு செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட மலையாள படமான ‘ரோமாஞ்சம்’ (Romancham) உலக அளவில் ரூ.62 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக் காலமாக மலையாள திரைப்படம் இந்திய வெளிச்சத்தை அதிக அளவில் பெற்று வருகிறது. ஓடிடியில் மலையாள திரைப்படத்தைக் கண்டு ரசித்த மற்ற மொழி ரசிகர்கள் தற்போது நேரடியாக திரையரங்குகளுக்குச் சென்றே கண்டுகளிக்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி நீண்டுள்ளது. இதன் வரவேற்பையொட்டி மற்ற மாநில திரையரங்குகளும் மலையாள படங்களை வாங்கி திரையிட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமாஞ்சம்’. அறிமுக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்தை ஜான்பால் ஜார்ஜ், கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். நகைச்சுவை ஹாரர் பாணியில் உருவான இப்படத்தின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டம் ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், கதையை மட்டுமே நம்பி மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டத்தில் உருவான இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.62 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் ஃபஹத் பாசிலுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று கேரளாவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் காணொளி:

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »