Press "Enter" to skip to content

‘நாட்டு நாட்டு’ முதல் ‘அவதார் 2’ வரை – ஆஸ்கர் விருது முழு பட்டியல் இதோ

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படமும் பெற்றுள்ளன. இவை தவிர்த்து மற்ற பிரிவுகளில் என்னென்ன படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

சிறந்த சர்வதேச முழுநீளத்திரைப்படம் (Best International Feature Film): எட்வர்ட் பெர்கர் இயக்கத்தில் பெலிக்ஸ் கம்மரர், ஆல்பிரெக்ட் ஷூச், ஆரோன் ஹில்மர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ ((All Quiet on the Western Front) திரைப்படம் சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகர்: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் நடித்துள்ள நடிகர் கே ஹுய் குவான், சிறந்த துணை நடிகருக்கான (Best Supporting Actor) ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். படத்தினை டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் ஆகியோர் இயக்கியிருந்தனர்.

சிறந்த துணை நடிகை: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) விருதை பெற்றிருக்கிறார் நடிகை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis)

சிறந்த திரைப்படம்: சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once)திரைப்படம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவில் இப்படம் 7 விருதுகளைப்பெற்று சாதித்துள்ளது.

சிறந்த நடிகர்: ‘தி வேல்’ (The Whale) படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ப்ரன்டன் ஃப்ரேசருக்கு (Brendan Fraser) வழங்கப்பட்டது.

சிறந்த நடிகை: சிறந்த நடிகருக்கான் விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படத்தில் நடித்த மலேசிய நடிகையான மிஷெல் யோ (Michelle Yeoh) வென்றார்.

சிறந்த இயக்குநர்: சிறந்த இயக்குநருக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Kwan, Daniel Scheinert) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த படத்தொகுப்பு: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் சிறந்த படத்தொகுப்புக்காக பால் ரோஜர்ஸூக்கு (Paul Rogers) ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒலி அமைப்பு: சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ‘டாப் கன்: மாவ்ரிக்’ (Top Gun: Maverick) திரைப்படத்திற்காக மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தழுவல் திரைக்கதை: சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ‘வூமன் டாக்கிங்’ (Women Talking) திரைப்படத்திற்காக சாரா பாலி (Sarah Polley)க்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதை: சிறந்த திரைக்கதைக்கான (Best Original Screenplay) விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Kwan, Daniel Scheinert) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படத்திற்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதினை விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) படத்திற்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துகான விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணப்பட திரைப்படம்: டேனியல் ரோஹர் (Daniel Roher) இயக்கத்தில் வெளியான ‘நாவல்னி’ (Navalny) ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு: சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை‘ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஃப்ரண்ட் (James Friend) பெற்றுக்கொண்டார்.

சிறந்த ஒப்பனை: சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது ‘தி வேல்’ (The Whale) திரைப்படத்திற்காக ஜூடி சின், அட்ரியன் மோரோட், அன்னே மேரி பிராட்லி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பு: ‘ப்ளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரேவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது ருத்.இ.கார்டர் (Ruth E. Carter) வழங்கப்பட்டது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: இசையமைப்பாளர் வோல்கர் பெர்டெல்மேன் ( Volker Bertelmann)க்கு ‘ஆல் குயின் வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »