Press "Enter" to skip to content

டிஜிட்டலில் வெளியாகிறது அஜித்தின் அமராவதி

அஜித் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘அமராவதி’. செல்வா இயக்கத்தில் 1993ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் இதைத் தயாரித்திருந்தார். அஜித் ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். மற்றும் நாசர், தலைவாசல் விஜய், சார்லி உட்பட பலர் நடித்திருந்தனர். பாலபாரதி இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது தான் அஜித்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) போட்டி விபத்தில் சிக்கினார். பின்னர் அவருக்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசினார்.

இந்தப் படம் இப்போது கணினி மயமான முறையில் வெளியாக இருக்கிறது. “அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் சோழா பொன்னுரங்கம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »