Press "Enter" to skip to content

ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!

ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!Jan 29, 2020 18:17:27 pmJan 29, 2020 18:17:35 pmWeb Team

தமிழர்களின் பக்தி கலாசாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய 6 தேவாரப் பாடல்கள் வெளியிட்டப்பட்டன.
பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பாடல்களை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பேரூர் ஆதினம் “திருமுறைகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானின் பல்வேறு கோயில்களில் அருள செய்யப்பெட்டவை என்ற பெருமைக்குரியவை. அத்தகைய திருமுறைகள் என்றென்றும் கயிலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று நம்புவது நம்முடைய மரபு.
நம் முன்னோர்களாலும், பேரூர் புராணத்திலும் தென் கயிலாயம் என்று போற்றப்படக் கூடிய பெருமைமிக்கது நம் வெள்ளியங்கிரி மலை. கயிலாயத்துக்கு போக முடியாதவர்கள் தென் கயிலாயத்துக்கு போனாலும் அந்த கயிலாயத்தின் பலனை அறியலாம். அத்தகைய தென் கயிலாய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் பல்வேறு வகையான சமயப் பணிகளையும் சமூக பணிகளையும் ஆற்றி வருகிறது.

அதில் ஒரு உன்னதமான பணியாக தேவாரப் பாடல்கள் வெளியிடப்படுகிறது. தமிழுக்காக ஏராளமான பணிகள் செய்து வரும் பேரூர் ஆதினத்தில் இதை வெளியிடுவது பெருமைக்குரியது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு சிறப்பான முறையில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். அவற்றினூடே இந்தப் பணியையும் எடுத்து இருப்பது, தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் அவர் ஆற்றிகொண்டிருக்கும் தொண்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
இதுகுறித்து சத்குரு கூறுகையில், “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையில் ஒரு பக்தி கலாச்சாரம். பக்தியையே ஒரு மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால், அது வெறும் கடவுள் பற்றி அல்ல. நீங்கள் ஏதோ ஒரு தன்மையை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டுமென்றால், அதற்கு பக்தி அவசியம். விளையாட்டு, இசை, கலை, தொழில் என அது எதுவாக இருந்தாலும், அதை உயர்ந்த நிலைக்குகொண்டு செல்ல அதற்கு பக்தி தேவை.

பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. யார் முழு பக்தியுடன் ஒரு செயலில் இறங்குகிறார்களோ, அது சின்னதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள். தமிழ் கலாசாரத்தில் பரவசத்திலேயே வாழ்ந்த பல பக்தர்கள் இருக்கிறார்கள். பக்தியின் வெளிப்பாடு தான் தேவாரம்” என்று தெரிவித்தார். View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »